தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025-2027 காலப்பகுதியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளவுள்ள சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு பிரதேச செயலாளர் தலைமையில் 03.01.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி திணைக்கள நுண்நிதி மற்றும் CBOபிரிவு மாவட்ட முகாமையாளர் திரு.T.யோகேந்திரன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.

"கிளீன் ஸ்ரீ லங்கா" - Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றியதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து சனாதிபதி செயலகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டதை ஆரம்பித்து வைக்கும் தேசிய நிகழ்வுடன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைத்து கிராம மட்ட அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அனைத்து பிரதேச செயலக உத்தியாகத்தர்கள் கலந்துகொண்டு சத்யப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.
![]() |

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கான இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான மேலதிக சலுகைக் காலத்தை வழங்கல்.இதுவரை முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்பிக்கத் தவறியவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்காக அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி 25.11.2024 ஆம் திகதி முதல் 02.12.2024 ஆம் திகதி வரையான காலத்தினுள் இதுவரை விண்ணப்பங்களைச் சமர்பிக்காதவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்கான
சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இரண்டாம் கட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தேசிய அடையாள அட்டை அவசியமாகும்.
மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் 11 பாடவிதானங்களை கொண்ட ஒரு வருட மனைப்பொருளியல் டிப்ளோமா உடன் இணைந்த, ஆடை உற்பத்திக்கான தேசிய தொழில் தகைமை – 04 (NVQ Level – 04) கற்கை நெறிக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்விற்கான விண்ணப்பங்களானது வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களாலும் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம்.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 14.10.2024 நடாத்திய முதியோர் தின விழாவில் முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிக்கப்பட்ட முதியவர்களின் தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் முதலிடத்தையும் ஒருவர் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். வாழ்நாள் சாதனையாளராக தென்மராட்சி பிரதேசத்தை சேர்ந்த Dr ச.சி.அருளானந்தம்
(பொது ) வருகை விரிவுரையாளர் பொன்.ஸ்ரீவாமதேவன் (கலை) ஓய்வு பெற்ற அதிபர் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் (விளையாட்டு ) ஆகியோருடன்100 வயதை அண்மித்த கலைஞர் செல்லையா குமாரசாமி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணத்தைச் சேர்ந்த 16 முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
![]() |
![]() |


















