பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2025.02.10 (திங்கட்கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பி.ப 3.15 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாகவும்,சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதில் சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனத்தினர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச்சங்க பொதுச்சபை நிர்வாகதெரிவு கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 05.02.2025 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் ,பிரதேசசெயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், மாவட்ட கண்காணிப்பு முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக சாவகச்சேரி வங்கியை சேர்ந்த ம.விவேகானந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி உயர் தர கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக துறைத் தெரியும் தொடர்பான கலந்துரையாடல் 23.01.2025 பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேசச் செயலக மனித வலு அபிவிருத்தி மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் மற்றும் பதிவாளர் நாயக திணைக்கள வேலைத்திட்டத்துக்கு அமைய அரச அலுவலகங்களை  டிஜிட்டல் மயமாக்கல்  செயற்பாட்டுக்கமைய தென்மராட்சி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையில்  டிஜிட்டல் செயற்திட்டத்திற்கமைய விண்ணப்ப படிவங்களின்றி பிறப்பு, இறப்பு,திருமண சான்றிதழ்களை  வழங்கும் நடவடிக்கையானது 07.02.2025 இலிருந்து யாழ் மாவட்டத்தில் முதலாவது பிரதேச செயலகமாக தென்மராட்சி பிரதேச செயலகத்தில்  முன்னெடுக்கப்படுகின்றது.

எமது பிரதேச செயலக தைப்பொங்கல் விழா 15.01.2025 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

 473831867 1790263491827941 5513949187986033035 n  474081740 1790241668496790 6333330712434056180 n

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top