தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

![]() |

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2025.02.10 (திங்கட்கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பி.ப 3.15 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாகவும்,சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதில் சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனத்தினர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து யா/யாழ்ப்பா ம் மத்திய கல்லூரி யில் 2025.02.14ம் திகதி அன்று நடாத்தி ய "அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி - 2025 இல் எமது பிரதேச செயலகம் சார்பில் பங்கு பற்றிய நவீல்ட் பாடசாலை மாணவர்கள் 8 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும் மற்றும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டார்கள். ஒட்டு மொத்தமாக எமது பிரதேச செயலகம் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

















