தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கைதடி தொழில் பயிற்சி அதிகாரசபையில் 26.03.2025 அன்று இளைஞர் யுவதிகளுக்கு எதிர் காலத்தில் சிறுகைத்தொழிலினை ஆரம்பித்து செயற்படுத்துவதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு சிறுகைத்தொழில் உதவி பணிப்பாளரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் 40 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

486759352 1844890576365232 8909894639871766046 n

கணனி பயிற்சி வகுப்பு 18.03.2025 மற்றும் 20.03.2025ம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சி.ஜெயசிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.தர்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கணனி மென்பொருள், வன்பொருள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 485026090 1839345913586365 7478521144636711302 n484978627 1839345903586366 158399467991838727 n  

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான காலை உணவு வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலானது 26.03.2025 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பெண்கள் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரால் காலை உணவு வழங்குதல் தொடர்பான ஆலோசனையும் அது தொடர்பான அறிவுறுத்துதல்களும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு வழங்கப்படுகின்ற முன்பள்ளிகளிகளின் ஆசிரியர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 487316461 1844886939698929 8116179909111040427 n 486973862 1844886959698927 6925710706945588170 n 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்தின வாரத்தின் ஒரு நிகழ்வாக கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 07/03/2025 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை திட்டமிடல் பணிப்பாளர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் குறிப்பிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top