தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சாவகச்சேரி நகர் கிராம அலுவலர் பொது மண்டபத்தில் 20.05.2025,21.05.2025 ஆகிய இரண்டு நாட்கள் இளைஞர் யுவதிகளுக்கு எதிர் காலத்தில் சிறுகைத்தொழிலினை மேம்படுத்துவதற்கான வியாபார முகாமைத்துவ பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு சிறுகைத்தொழில் உதவி பணிப்பாளரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் 25 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன்பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 20.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் வளவாளராக பங்குபற்றி சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன் பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மிருசுவில் அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.05.2025 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பெற்றோரியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளராக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
|
தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பிரதேச செயலக பொது மண்டபத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களுக்கு 16.05.2025 அன்று Information Technology program நடைபெற்றது. இந் நிகழ்வில் 30 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அத்துடன் முயற்சியாளர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களால் சகவாழ்வுச் சங்கம் பற்றிய விளக்கமும் சகவாழ்வுச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வாழ்வாதார உதவித்திட்டங்கள் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது.
"செழிப்பான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் பயிற்சி நெறியின் J/318 கிராம அலுவலர் பிரிவு தொடக்கம் J/347 கிராம அலுவலர் பிரிவு வரையான இரண்டாம் கட்ட நிகழ்வு 28.04.2025 அன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















