கிராமிய காணி பயன்பாட்டு அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் உதவிப்பிரதேசசெயலர் தலைமையில் கரம்பகம் கிராம உத்தியோகத்தரின் பங்களிப்புடன் கரம்பகம் கிராம செயலகத்தில் 15.05.2026 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் காணிப்பயன்பாடு தொடர்பான திட்டங்கள் ஆராயப்பட்டதோடு வீதிகள், வீதி மின்விளக்குகள், புகையிரதநிலையக்கடவை, வாய்க்கால்கள், குளங்கள், கல்வி, விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு போன்றவற்றிற்கான அபிவிருத்திகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிமுறைகளும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்களினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்டது
தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியசோதி தலைமையில் வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான வியாபாரத் திட்டமானது ( வியாபார நடவடிக்கை தொடர்ச்சியான வரவு செலவு, வளங்களினை திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்துதல்) 20 உள்ளூர் முயற்சியாளர்களுக்கு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இவ் வியாபார திட்டமானது (Business plan) 05.05.2026ம் திகதி உள்ளூர் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிக்கும் நுண்கடன் திட்டம் பெறுவதை நோக்கமாகவும் மற்றும் தமது வியாபாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ப தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
 690641084 2191161121738174 6078325433975453226 n 689456250 2191161231738163 4924276098233399959 n 

தென்மராட்சி பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் ஒன்றிணைந்து வேலை தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு 2026.04.25 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்டது .இந் நிகழ்வில் தொழில் மற்றும் தொழில் பயிற்சி வழங்கும் அரச, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

 680459851 2183217105865909 1770207517317167919 n 682336789 2183216869199266 2943877981179215939 n  680997489 2183217022532584 7135177850572996773 n 
"தமக்கென ஒரு இடம் -அழகான வாழ்க்கை" என்ற தொனிப் பொருளின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்த மக்களில் நீண்ட காலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பாதுகாப்பானதொரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலை திட்டம் தென்மராட்சியில் 2026.01.16 வெள்ளிக்கிழமை அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்பில்( ஒரு வீட்டிற்கு ரூபாய் இரண்டு மில்லியன்) மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல் 2026.01.16 அன்று J/318 -மீசாலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சம்பிரதாயபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நாட்டப்பட்டது. அப்பயனாளியினால் பூரணப்படுத்தப்பட்ட வீட்டின் புதுமனை நிகழ்வு 2026.04.28 செவ்வாய்க்கிழமை இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களும் தென்மராட்சி பிரதேச செயலாளர் உயர்திரு F.C சத்தியசோதி அவர்களும் உதவி பிரதேச செயலாளர் திருமதி நி.லாகினி அவர்களும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு இ.திலீபன் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 683183432 2184195845768035 1330695508052176774 n 680412604 2184196029101350 7320336675214571361 n 
தென்மராட்சி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.45 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் F.C. சத்தியசோதி அவர்களுக்கு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கைவிசேடத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டது.
 672677414 2172646366922983 1400651523559430144 n  671666678 2172625353591751 5448587500976217558 n 672677394 2172626140258339 8649854781985311614 n 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top