ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம்” என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு (27.07.2026) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் திரு F.C. சத்தியசோதி அவர்களால் விழிப்புணர்வு உரை மேற்கொள்ளப்பட்டது.“சட்டத்தை மதிப்போம் – நேர்மைமிக்க அரசு சேவை” என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறுகிறது என பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையின் திறன், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தமது பணிப்பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நிறைவேற்ற வேண்டும்.இன்று நாம் மேற்கொண்டுள்ள நேர்மை உறுதிமொழி ஒரு அரச சேவையாளர் எவ்வாறு தமது கடமைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.அதுவே “நேர்மையான அரசு சேவை – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
758288792 2266197687567850 7796284126061477348 n 758264703 2266197627567856 1328758040453286515 n

பாரம்பரிய மருத்துவர்களால் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆனது 20.07.2026 திங்கட் கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் சமூக சித்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கியதுடன் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதனூடாக பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 1  WhatsApp Image 2026 07 20 at 3.57.53 PM 2

 WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 4

 

WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 3

தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு Business Clinic program ஆனது 17.07.2026ம் திகதி தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் அ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.ஜெயஸ்ரீ அம்மையார், மாவட்ட செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவி பணிப்பாளர் ச.சசீபன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் தலைவர் ஜஸ்மின் அம்மையார், மத்திய வங்கி- கிளிநொச்சி,மக்கள் வங்கி- சாவகச்சேரி, இலங்கை வங்கி-சாவகச்சேரி,commercial bank- Chavakachcheri, HNB, NSB, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை,தொழில்துறை திணைக்களம்,சுகாதார வைத்திய அதிகாரி-சாவகச்சேரி, பிரதேச சபை, நகர சபை, மின்சார சபை, விதாத வளநிலையம்,கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, provincial industry மற்றும் Business Registration officer ஆகிய சேவை வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் 35 ற்கும் மேற்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் 75 தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வியாபாரப்பதிவு எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய நடைமுறைகளும், முயற்சியாளர்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டல்களும், வங்கிக் கடன் குறித்த ஆலோசனைகளும் விபரங்களும் தொழில் முயற்சியாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.

750290153 2259357781585174 3878381853365936355 n 751871794 2259358014918484 8856673180402584140 n 
 749952734 2259358661585086 5216477413777467707 n  750585943 2259358141585138 617715087362881395 n

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் வரணி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய பிரதேச ஆடிப்பிறப்பு விழா வரணி கலாசார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர் திரு அ.கலைச்செல்வன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீடமுகாமையாளர் திருமதி ஜெ.வசந்தி அவர்களும், சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தலைவர் திரு சி.சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வரணி குடும்ப முன்பள்ளி மாணவர்களும் கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலைநிகழ்வுகளை வெகு சிறப்பாக ஆற்றியிருந்தனர்.

 749300788 2259530004901285 842167856277525717 n  749756039 2259530934901192 3419505506936457599 n  749300796 2259531544901131 4272331252152996314 n

  749629595 2259531498234469 6843710872470385911 n

 753164113 2259531068234512 3520707662279914566 n  750053946 2259531378234481 3566748825858045037 n
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி உதவியுடன், தென்மராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் மக்கள் வசம் கையளிப்பு!
​வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்புடன் தென்மராட்சிப் பிரதேசத்தில் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரு பயனாளிகளின் வீடுகள், மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு இன்று 17.07.2026 வெள்ளிக்கிழமை J/301 கோயிற்குடியிருப்பு மற்றும் J/318 மீசாலை கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெற்றது.
​இந்நிகழ்வில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க(பா.உ) அவர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ க.இளங்குமரன் அவர்கள், ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளைப் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
​இதனைத் தொடர்ந்து, சமூக உற்பத்தி கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள J/345 மந்துவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில், 'பிரஜாசக்தி' தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உன்னிய வயற்கரை வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
​தொடர்ந்து நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில், இப்பகுதி சமூக உற்பத்தி கிராமப் பயனாளிகளான 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன், 'Clean SriLanka' தென்மராட்சி அமைப்பாளர் மருத்துவர் செல்வகணேஷ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் கா.பிரகாஷ் மற்றும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளின் பிரஜாசக்தி அமைப்புகளின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கிராமத்தின் எதிர்கால வாழ்வாதார மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

 748438128 2257006845153601 970665289912604968 n

 749269283 2257007358486883 2612626312947124063 n  747948800 2257006978486921 8513717352838626254 n  

  748678468 2257007265153559 9203129256102000832 n

749036340 2257006855153600 4452010746575221541 n

 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top