யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலையா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 12.02.2026 பி.ப 12.30 மணிக்கு பாடசாலைஅதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்களது ஒழுக்க மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பொதுச்சபை நிறைவேற்றுக்குழுத் தெரிவுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 11.02.2026 புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர், கணக்காளர், தலைமைப்பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வி.சதாசிவம் நிலூஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய கண்பரிசோதனை முகாமானது 08.02.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் Dr.K.பத்மநாதன் அவர்களும், மாவட்ட கணனி தொழிநுட்ப ஆலோசகர், Dr.S.மனோகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர். 230 வரையிலான பயனாளிகள் பங்குபெற்றி பயன்பெற்றதுடன் விசேடமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள தேவையுள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களுக்கான சிகிச்சையினை அவசியத்தன்மையின் அடிப்படையில் நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இலவசமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இந் நிகழ்வின் விசேட அம்சமாகும்.
![]() |
![]() |
![]() |
![]() |


























