" நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்"
எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடம் தோறும் நடாத்திவரும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு மற்றும் கொடிதின சேமிப்பு ஊர்வல நிகழ்வானது 13.06.2025 காலை 9.00 மணிக்கு கைதடி வங்கிக்கு உட்பட்ட நகர் பிரதேசங்களில் நடைபெற்றது இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர், CBO அங்கத்தவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 506476895 1908773923310230 2161209931806035042 n  506456490 1908773996643556 6625320044898197564 n

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 3 ம் கட்டம் - குடும்ப உள வலுப்படுத்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கணக்காளர், வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட செயலக உளவளத்துணை பிரிவு உத்தியோகத்தர்களான திரு.N.உதயகுமார், திரு.க.தர்மசேகரம் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்கள்.

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 2 ம் கட்டம் - குடும்ப அபிவிருத்தித்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு தலைமையக முகாமையாளர் தலைமையில் 22.05.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளராக நல்லூர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.தி.சந்திரகாசன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 26.05.2025 அன்று விற்பனைச் சந்தை இடம் பெற்றது. இந் நிகழ்வில் 20 முயற்சியாளர்கள் பங்குபற்றி தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பயனடைந்தனர்.

 501811369 1894347981419491 2232943478440347047 n  501906690 1894348184752804 1272404934698387439 n

யா/ சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப் பாடத் தெரிவு பற்றிய கலந்துரையாடல் 28.05.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.

யா/ சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகம் தெரிவு மற்றும் தொழிற் பயிற்சி தொடர்பான கலந்துரையாடல் 21.05.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேசச் செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top