தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.07.2025) காலை 09.00 மணிக்கு கொடிகாமம் கச்சாய் கிராமத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றைய தினம் சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் இந் நடவடிக்கையானது 16.07.2025 திகதிவரை நடைமுறைப்படுத்தப்படும்.
518312040 1932916827562606 4767240488353715235 n 518306110 1932916950895927 5306027979843327080 n

சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு 01.சர்வதேச சுற்றாடல் தினம் 02.போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நான்கு சமுர்த்தி வங்கிகளிற்கு உட்பட்ட பிரதேசங்களில் மரநடுகை நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு மற்றும் மக்கள் மத்தியில் போதை பாவனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், போதை தடுப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், கிராமமட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள், பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

விதாதா பிரிவினரால் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சலவைத்திரவம் செய்வது தொடர்பான பயிற்சிப்பட்டறை 26- 06- 2025அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் முதன் முறையாக இருதய சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உதவி கொடுப்பனவாக இரண்டுபேருக்கு தலா 250,000.00 ரூபா வீதம் காசோலையினை 20.06.2025 அன்று வழங்கி வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலாளர் திருமதி.சு.உஷா அவர்களும் கணக்காளர் திரு.இ.றமணன் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

509356530 1914449739409315 2871670111473457893 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top