வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி உதவியுடன், தென்மராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் மக்கள் வசம் கையளிப்பு!
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்புடன் தென்மராட்சிப் பிரதேசத்தில் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரு பயனாளிகளின் வீடுகள், மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு இன்று 17.07.2026 வெள்ளிக்கிழமை J/301 கோயிற்குடியிருப்பு மற்றும் J/318 மீசாலை கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க(பா.உ) அவர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ க.இளங்குமரன் அவர்கள், ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளைப் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சமூக உற்பத்தி கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள J/345 மந்துவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில், 'பிரஜாசக்தி' தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உன்னிய வயற்கரை வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில், இப்பகுதி சமூக உற்பத்தி கிராமப் பயனாளிகளான 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன், 'Clean SriLanka' தென்மராட்சி அமைப்பாளர் மருத்துவர் செல்வகணேஷ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் கா.பிரகாஷ் மற்றும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளின் பிரஜாசக்தி அமைப்புகளின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கிராமத்தின் எதிர்கால வாழ்வாதார மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.
|
|
![]() |
![]() |
|
|
|




















