கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 1ஆம் இடம்
கு.தேனுகா 1500m 1ஆம் இடம்
மு. சிந்துஜா 100m ஓட்டம் 2ஆம் இடம்
அஞ்சல் ஓட்டம் பெண்கள் 2ஆம் இடம்
சி .மதீஸ்வரன் குண்டு எறிதல் 3ஆம் இடம்
![]() |
![]() |
சிறுவர் பெண்கள் பிரிவினரால் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.09.2023 வெள்ளிக்கிழமை நாவலர் முன்பள்ளியில் ஆசிரியரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் சிறுவர் உரிமை ,பாதுகாப்பு மற்றும் உளநலம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட உளநல சமூகத்தின் அனுசரணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் கடந்த 26.09.2023 அன்று சாவகச்சேரி ஐங்கரன் மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாதர்சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் ,இளைஞர் கழகம் மற்றும் பெண்கள் விவகார அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான பால்நிலை உணர் திறன், பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்துதல் என்னும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Friends நிறுவனத்தின் அனுசணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவினரால் வரணி வடக்கு மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 12.09.2023 செவ்வாய்க்கிழமை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் பாதுகாப்பு, நெருக்கீட்டு முகாமைத்துவம், மற்றும் பால்நிலை வன்முறை, வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

















