தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய smart youth புத்தாண்டு -2024 நிகழ்வுகள்.
2024.04.27 அன்று யா/நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவி செல்வி.சி.தருசாளினி அவர்கள் தலைமை ஏற்று நடாத்தியிருந்தார்.
பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக உதவிப்பிரதேச செயலர் திருமதி.தமிழினி சதீஸ், நாவற்குழி மகாவித்தியாலய அதிபர் திரு.சு.சிவானந்தன் மற்றும் தேசிய பழுதூக்கல் வீரர் திரு.ச.புசாந்தன் ஆகியோருடன் சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயசிறி, நிர்வாக கிராம அலுவலர் திரு.இராஜசுதாகர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.ஐங்கரன் ஆகியோருடன் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், பெருமளவான இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் நாடுபூராகவும் 340 பிரதேச செயலர் பிரிவுகளிலும் நடைபெற்ற இன் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக எமது தென்மராட்சி பிரதேச smart youth புத்தாண்டு விழாவானது பாரம்பரிய விளையாட்டுக்கள் கலை நிகழ்வுகள் என்பனவற்றுடன் வெகுவிமர்சியாக, நடைபெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.441036764 1607969700057322 7645582785305888437 n

சிறுவர் பெண்கள் பிரிவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கிளிநொச்சி உளநல அமைப்பின் அனுசரணையில் பால்நிலை சமத்துவம், பெற்றோரியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது நுணாவில் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் தலைமையில் 09/04/2024 அன்று 9.30 -2.30மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராமிய அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்னும் தொனிப்பொருளில் 2024ம் ஆண்டிற்கான மகளிர் தின விழாவானது தென்மராட்சி பிரதேச செயலத்தில் 26.03.2024 அன்று மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருமதி Dr.கமலா ஜெகூ (பொது வைத்திய நிபுணர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி சுகிர்தன் குகப்பிரியா (சட்டத்தரணி சட்ட அலுவலர்), திருமதி லலிதாமலர் முகுந்தன் (அதிபர் யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), திரு யூட் நிஷாந்தன் (முகாமையாளர் உலக தரிசன நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.கௌரவ விருந்தினராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி (உலக பசி ஒழிப்பு மன்றம் கனடா) அவர்களும் கலந்துகொண்டார்.இதில் சிறப்புரைகள் ,சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது

Inspiration mood 1

சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பின் வருடாந்த பொது கூட்டம் 28.03.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பின் தலைவரின் தலைமையின் நடைபெற்றது . இவ் நிகழ்வின் போது 2024 ஆம் ஆண்டிற்கான புது நிர்வாக தெரிவு இடம்பெற்றது .இவ் நிகழ்விற்கு சமுர்த்தி முகாமையாளர் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

435375827 1591406905046935 2568850450158445242 n

அஸ்வசும கொடுப்பனவிற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் கோரப்பட்டுள்ளன. 1ம் கட்டத் தெரிவின் போது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் 1ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நலன்புரி நன்மைகள் சபையினால் எண்ணீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, தரவுத்தளத்தில் விபரங்கள் உட்சேர்க்கப்படாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தாங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவராயின், நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளம் ஊடாக அல்லது தங்கள் கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக 2ஆம் கட்ட நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கு மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அவசியமாகும்.

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top