தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய smart youth புத்தாண்டு -2024 நிகழ்வுகள்.
2024.04.27 அன்று யா/நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவி செல்வி.சி.தருசாளினி அவர்கள் தலைமை ஏற்று நடாத்தியிருந்தார்.
பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக உதவிப்பிரதேச செயலர் திருமதி.தமிழினி சதீஸ், நாவற்குழி மகாவித்தியாலய அதிபர் திரு.சு.சிவானந்தன் மற்றும் தேசிய பழுதூக்கல் வீரர் திரு.ச.புசாந்தன் ஆகியோருடன் சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயசிறி, நிர்வாக கிராம அலுவலர் திரு.இராஜசுதாகர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.ஐங்கரன் ஆகியோருடன் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், பெருமளவான இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் நாடுபூராகவும் 340 பிரதேச செயலர் பிரிவுகளிலும் நடைபெற்ற இன் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக எமது தென்மராட்சி பிரதேச smart youth புத்தாண்டு விழாவானது பாரம்பரிய விளையாட்டுக்கள் கலை நிகழ்வுகள் என்பனவற்றுடன் வெகுவிமர்சியாக, நடைபெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
















