சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்புவிழாவானது 06.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு எப் சி சத்தியசோதி தலைமையில் ஆரம்பமாகியது .
இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு .பொ .ஸ்ரீ வர்ணன் மற்றும் பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.சமுர்த்தி ஆரோக்கிய உணவகத்தினை யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திரு .பொ .ஸ்ரீ வர்ணன் , பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ , பிரதேச சபை கௌரவ தவிசாளர் பொ.குகதாசன் மற்றும் பிரதேச செயலாளர் திரு எப் சி சத்தியசோதி ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி நிகழ்வினை தொடர்ந்து சமுர்த்தி தேசிய வலுவூட்டிடல் பயனாளிகளிற்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து வரவேற்புரையினை சமுர்த்தி தலைமப்பீட முகாமையாளர் அவர்களும் தலைமையுரையினை பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர் உரையினை பிரதி பணிப்பாளர் -குறுநிதி திரு மகேஷ் பெர்னாண்டோ அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை யாழ் மாவட்ட செயலாளர் உயர்திரு ம.பிரதீபன் அவர்களும் நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் தனது உரையில் ஆரோக்கிய உணவகத்தின் ஊடாக பயனாளிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தமுடியும் எனவும் ஆரோக்கிய உணவத்தினை ஆரம்பிப்பதன் மூலம் பயனாளிகளின் வாழ்கை தரத்தினை மேம்படுத்திடும் முயற்சிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்ததோடு கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்தது விளங்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கொடிகாமம் வங்கிற்குற்பட்ட பாடசாலை மாண்வர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
 630158272 2113175636203390 3793500295475851054 n  627669027 2113175466203407 8494795503876582380 n  628015594 2113203826200571 2216549612749693293 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top