தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம் வங்கி வலயத்திற்குட்பட்ட மூன்று பயனாளிகளுக்கு கடற்தொழில் மேற்கொள்வதற்கான வலைகள் 02.01.2026 வெள்ளிக்கிழமை அன்று மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 01 06 at 10.05.47  WhatsApp Image 2026 01 06 at 10.05.48 WhatsApp Image 2026 01 06 at 10.05.48 1 
2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை 8.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30மணிக்கு பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் மயமாக்கல், க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் அண்மையில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்கள் அவற்றில் இருந்து மீள் எழும் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துரைத்த அதேவேளை இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டு வரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

605726967 2082174082636879 2563255436794963931 n

605577556 2082174542636833 6017819937318774244 n
 605748676 2082176412636646 5718273465597270171 n

29,30.12.2025 ஆகிய இரு தினங்களும் நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விடய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான சமூக அபிவிருத்திக் குழுவின் ஆக்கமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு பிரதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 607235643 2081623282691959 4481612507990335939 n 605222987 2081623386025282 6394188240883180706 n 

 

அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வும் மொழித்திட்ட குழுவை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2025.12.29 ஆம் திகதி திங்கட்கிழமை பி. ப 2.00மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F. C சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 605951154 2080540209466933 1186864356887863780 n    605459151 2080540259466928 2365602800832982652 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top