78ஆவது சுதந்திர தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு F.C .சத்தியசோதி அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வானது HWPL மற்றும் Green Layer அமைப்பின் அனுசரணை மற்றும் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
 626059353 2110821356438818 5756928032920465547 n  626691764 2110821809772106 3341896697110596835 n 626303042 2110852656435688 5333399604564575562 n 

தென்மராட்சி பிரதேச செயலக கைதடி சமுர்த்தி வங்கியின் பொதுசபைக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 13.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கைதடி சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.யோகேஸ்வரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 626106760 2110050566515897 1450444359854765392 n  627759415 2110050706515883 6447923121109232167 n  625060070 2110050619849225 5425834683469697829 n
தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2026.01.28 புதன்கிழமை பி .ப 2மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் க .இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ,கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களும் கலந்துகொண்டதோடு கெளரவ நகரசபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் , கெளரவ பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , நகர , பிரதேச சபைகளின் அழைக்கப்பட்ட கெளரவ உறுப்பினர்கள் , திணைக்களத்தலைவர்கள் /பிரதிநிதிகள் ,பொலிஸ்நிலையங்களின் பொறுப்பான உத்தியோகத்தர்கள் ,சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர் .
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் இக்கூட்டம் இவ்வருடத்தின் முதலாவது கூட்டமாக அமைவதால் நல்ல தொடக்கங்கள் நல்ல முடிவுகளை தரும் என்ற நல்ல சிந்தனையுடன் எமது மக்களின் நல்வாழ்வுக்கான தேவைப்பாடுகளை சரியான வகையில் இச் சபையில் முன்வைக்குமாறும் வாத விவாதமாக உருவாக்கவேண்டாம் எனவும் சுமூகமான முறையில் ஆக்கப்பூர்வமாக பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்வைக்குமாறும் தனது வரவேற்புரையில் கேட்டுக் கொண்டார் . தொடர்ந்து கெளரவ ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் தனது தலைமையுரையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பல எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் புதியதொரு ஆண்டின் தொடக்கத்தில் இப் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இக் கூட்டத்தில் 2026ம் ஆண்டில் முன்னுரிமையடிப்படையில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள அனர்த்த தணிப்பு செயற்திட்டங்கள் , வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியீட்டத்தால் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல் , கைதடி மற்றும் சாவகச்சேரி கமநலசேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் ,தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சுற்றுலா அபிவிருத்திக்காக சுமார் 3912 மீற்றர் நீளமான புதிய வீதி நிர்மாணிப்பு என்பவற்றிற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி வழங்கபட்டுள்ளதுடன் தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சுற்றுலாத்துறை அபிவிருத்திசார் தனியார் முதலீட்டிற்கு நீண்டகால குத்தகை நோக்கில் காணி வழங்குவது தொடர்பாகவும் வடமாகாண சுற்றுலா பணியகத்திற்கு கைதடி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் காணி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் இயங்காத கடைகளை மீளப்பெற்று வேறு பொருத்தமான நபர்களுக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் 19.09.2025இல் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட் ட தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்ற நிலைமை விரிவாக ஆராயப்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய துரித நடவடிக்கை தொடர்பாக உரிய திணைக்களங்களிற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் வழிகாட்டல் வழங்கப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவில் தென்மராட்சி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிகழ்ச்சி திட்டத்தின் மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் எந்தவிதமான திணைக்களங்களின் பராமரிப்பிலும் இதுவரை இல்லாத வாய்க்கால்கள்,குளங்கள் ,வீதிகள் என்பவற்றை பொருத்தமான திணைக்களங்களினுள் உள்வாங்குவது தொடர்பாகவும் கைதடி நிலத்தடி நீரினை பாதுகாப்பது தொடர்பாகவும் ,சரசாலை ஆயுள்வேத மருந்தகத்தினை சீராக இயங்கச்செய்வது தொடர்பாகவும் தனங்கிளப்பு பகுதியில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கையினை சூழல் நேயம் மிக்கதொன்றாக வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் , மலக்கழிவுகளை தென்னம்தோட்டங்களில் கொட்டுவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு நிலைபேறான பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், பிரதேசசபை ,நகரசபை என்பவற்றால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இப் பிரதேசத்தின் ஏனைய அரச திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் அரச திணைக்களங்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய திணைக்களங்களால் முன்வைப்பு (Presentation) மேற்கொள்ளப்பட்டது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரஜாசக்தி வேலைத்திட்டம் தனியொரு கட்சிசார் நடவடிக்கையாக முன்னெடுப்பதால் தமது ஒத்துழைப்பினை நகர சபை , பிரதேச சபை வழங்காது என சாவகச்சேரி நகர சபை , பிரதேசசபை தவிசாளரினால் சபையில் அறியதரப்பட்டதுடன் அதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் இக்கூட்டம் பி .ப 6.45 மணிக்கு நிறைவுபெற்றது.
 WhatsApp Image 2026 01 29 at 14.46.10  WhatsApp Image 2026 01 29 at 14.46.10 1  WhatsApp Image 2026 01 29 at 14.46.11

சனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இருதய சத்திர சிகிச்சைக்கான ஆறாவது கொடுப்பனவாக ரூபா 250,000/- பெறுமதியான காசோலை சாவகச்சேரி நகர கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திருமதி நாகரத்தினம் சந்திரலேகா அவர்களுக்கு 02.02.2026 ம் திகதி பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கணக்காளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                                            WhatsApp Image 2026 02 02 at 14.35.59

World Vision நிறுவனத்தின் அனுசரணையில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ அமைப்புகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான மதிநிலை மகளிர் திட்டம் (Women Rise Up project) நிகழ்ச்சி 27,28.01.2026 ஆம் திகதிகளில் தென்மராட்சி பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2026 01 29 at 12.35.46 WhatsApp Image 2026 01 29 at 12.35.47   WhatsApp Image 2026 01 29 at 12.35.49 1

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top