"பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை" எனும் தொனிப்பொருளில் பசுமை நாடு வீட்டு தோட்ட ஆரம்ப நிகழ்வானது J/301 கிராம அலுவலர் பிரிவில் 29.03.2022 அன்று காலை 9.10 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், நகரசபை உறுப்பினர்கள், தம்புதோட்ட இராணுவபடை உறுப்பினர்கள், கிராமமட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
|
![]() |
![]() |
![]() |
வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
சிறுவர் கழகங்களுக்கான சிறுவர் உரிமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் 26.03.2022 அன்று கச்சாய் கிராம அலுவலர் பிரிவிலும் , 27.03.2022 அன்று விடத்தற்பளை மற்றும் உசன் கிராம அலுவலர் பிரிவுகளிலும் இடம்பெற்றது .
![]() |
|
|
![]() |
![]() |
![]() |
|
![]() |
|
























