விவசாய அமைச்சின் கீழ் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலர் தலைமையில் 29.12.2025 அன்று J/300 கிராம அலுவலகத்தில் வாயுத்துப்பாக்கியின் பயன்பாடு தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கலந்து கொண்டு ஆய்விற்கான தகவல்களை மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம் சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இடமிருந்து கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை பெற்றுக்கொண்டார்.
 
 605773656 2080537946133826 1438366140045801038 n   605521831 2080537992800488 5188240753760164573 n 
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (26.12.2025) காலை 09.30 மணிக்கு சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது . 
 
 
605122361 2077485429772411 7344562877155951591 n   605218006 2077485266439094 4267110908777796854 n

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 22.12.2025 திங்கட்கிழமை காலை 10.00 - 12.30 மணிவரை  யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட செயற்றிட்ட குழுவினர்  கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில்  உளவளத்துணை உத்தியோகத்தர்கள் பெண்கள் அபிவிருத்தி  உத்தியோகத்தர் மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு  கட்டிளமைப்பருவத்தில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் தொடர்பான கருத்துக்களும் வழங்கப்பட்டன.  

 WhatsApp Image 2025 12 23 at 15.44.30

ஒளி விழா - 24.12.2025

 605008487 2076565533197734 6553866377835123985 n  604636554 2076567323197555 3606415728180413822 n    605071720_2076566753197612_364593067858060860_n.jpg  602472829 2076566659864288 5950286602520832680 n
  605430355 2076567419864212 8870178689481156350 n    605313955 2076566819864272 23499669522171847 n   

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் சிறுவர் இல்ல சிறார்களிற்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 19.12.2025 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 - 4.30 மணிவரை கைதடி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக. சமுதாய சித்த மருத்துவர்களான Dr K. றஜித்தா, Dr S. ஜான்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் 

 WhatsApp Image 2025 12 23 at 15.06.52    WhatsApp Image 2025 12 23 at 15.06.53

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top