இணுவில் பொது நூலகத்தின் அனுசரனையுடன் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் குடும்பங்களுக்கு 70 நுளம்புவலைகள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், நிதி உதவியாளர், சமூகசேவை உத்தியோகத்தர் ,உளவளதுணை உத்தியோகத்தர் மற்றும் இணுவில் பொதுநூலக போசகர் இரா.அருட்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 01 08 at 14.14.43  WhatsApp Image 2026 01 08 at 14.14.45  WhatsApp Image 2026 01 08 at 14.14.44

2026 ம் ஆண்டுக்குரிய  தேருநர் இடாப்பு மீளாய்வு  தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் வகுப்புகள் பிரதேச செயலாளர் திரு F.C சத்திய சோதி தலைமையில் 07.01.2026 இன்று காலை 11.30 மணிக்கு  நடைபெற்றது. இவ் அறிவுறுத்தல் வகுப்பில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு இ .சசீலன் , உதவி பிரதேச செயலாளர் , நிர்வாக உத்தியோகத்தர் , மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர் . 

 WhatsApp Image 2026 01 07 at 12.00.52  WhatsApp Image 2026 01 07 at 12.00.51 WhatsApp Image 2026 01 07 at 12.00.52 1 
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் பணச்சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக 17 உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் 33 உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு கடிதங்களும் பிரதேசசெயலாளரால் 05.01.2026 பகுதிநாட் கூட்டத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 WhatsApp Image 2026 01 06 at 14.11.31 1  WhatsApp Image 2026 01 06 at 14.11.30 3  WhatsApp Image 2026 01 06 at 14.11.31
 
 

யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்  அனுசரணையுடன் PSDG திட்டத்தில்  ஊடாக  டித்வா இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 03  மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கான உதவிப் பொருட்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு 06.01.2026 ஆம் திகதி தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 WhatsApp Image 2026 01 07 at 08.50.09  WhatsApp Image 2026 01 07 at 08.50.10 WhatsApp Image 2026 01 07 at 08.50.10 1 

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, வரணி வங்கிகளிற்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு தையல்தொழில் மேற்கொள்வதற்கான தையல் இயந்திரங்கள் 02.01.2026 வெள்ளிக்கிழமை அன்று மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 01 06 at 10.02.06  WhatsApp Image 2026 01 06 at 10.02.05  WhatsApp Image 2026 01 06 at 10.02.04

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top