சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 22.12.2025 திங்கட்கிழமை காலை 10.00 - 12.30 மணிவரை யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட செயற்றிட்ட குழுவினர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு கட்டிளமைப்பருவத்தில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் தொடர்பான கருத்துக்களும் வழங்கப்பட்டன.
![]() |
















