தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு மற்றும் நேர்முகத்தேர்வானது 02/09/2020 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 119042221 753456035508697 3534140394574677036 o  118794067 753456055508695 5531183708111042299 o
    

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா-2020, 28/08/2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி சு .உஷா தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்திராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் ,சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க .விஜிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச மட்ட ரீதியாக CRC விளையாட்டுக் கழகமானது முதலாம் இடத்தையும், கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழகமானது இரண்டாம் இடத்தையும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகமானது மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. தென்மராட்சி பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி  தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த புவிதரன் (கோல் ஊன்றி பாய்தல் ) விதுஷன் (400m ஓட்டம் ) ஆகியோரும் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
 118849164 753449328842701 1190668549749002489 o 118785350 753450012175966 3458084723429602482 o   118990104 753449575509343 4256887736686438674 o  
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் 22.04.2020  அன்று வீசிய மினி சூறாவளியினால் மறவன்புலோ பகுதியில் பாதிக்கப்பட்ட 10 வீடுகளுக்குமான முற்பண கொடுப்பனவு 10000ரூபா  அவர்களது வங்கி கணக்கிற்கு  வைப்புச்செய்யப்பட்டது.
 Capture
யூன் 08ம் திகதி உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு , வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாற்றுமேடைகளிலிருந்து பெறப்பட்ட 200 மலைவேம்பு (மகோகனி) கன்றுகள் எமது பிரதேச செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்களில் நடுகை செய்யப்பட்டன .
104045997 693086088212359 2426001863887108781 o 104423435 693092461545055 7317048845293647202 n
   

 

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் மிகவும் நலிவுற்ற 22 குடும்பங்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் ரூபா 3500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 14.05.2020 அன்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கபட்டது. 
     
 IMG 7490    IMG 7489

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top