கன மழை காரணமாக வெள்ள பெருக்கு அபாயம் காணப்படும் எமது பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களை சார்ந்த 132 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கோவில்குடியிருப்பு கிராமஅலுவர் பிரிவில் 10 குடும்பங்களை சார்ந்த 27 பொதுமக்கள் பாதுகாப்பாக இடைத்தங்கல் முகாம்களுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எமது பிரதேச செயலகத்தில் 02/07/2013 தொடக்கம் 05/11/2021 வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (Ministry of Agriculture) கடமையாற்றி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.ச.மைதிலி, பளை பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.பி.நிவேதிதா மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திரு.த.செந்தில்ரூபன் ஆகியோர் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள்.இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்

எமது பிரதேச செயலகத்தில் 14.10.2021 அன்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக நவராத்திரி பூஜை நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
மாற்று திறனாளிகள் (மட்டுப்படுத்தபட்ட அளவினருக்கான) வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 03/11/2021 சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது .
![]() |
|





















