தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேசமட்ட சிறுவர் தின நிகழ்வு ஆனது 30.10.2026 வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு பிரதேசசெயலக மகாநாட்டு மண்டபத்தில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. கி.கமலறாஜன் ஐயா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காளர் இ.முருகதாஸ் ஐயா மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கணக்காளர் திரு.இ.ரமணன் ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன் உதவிப்பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் , முகாமைத்துவப் பணிப்பாளர் , கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் , உத்தியோகத்தர்கள், வேள்ட்விசன் இணைப்பாளர்கள் , பிரதேச அமைப்பு உறுப்பினர்கள்,மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் போன்றோரும் கலந்துகொண்டனர். மாணவர்களிற்கான கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களிற்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கான மெச்சுரை கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
![]() |
![]() |
















