பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2025.02.10 (திங்கட்கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பி.ப 3.15 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாகவும்,சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதில் சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனத்தினர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி உயர் தர கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக துறைத் தெரியும் தொடர்பான கலந்துரையாடல் 23.01.2025 பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேசச் செயலக மனித வலு அபிவிருத்தி மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கம் மற்றும் பதிவாளர் நாயக திணைக்கள வேலைத்திட்டத்துக்கு அமைய அரச அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டுக்கமைய தென்மராட்சி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையில் டிஜிட்டல் செயற்திட்டத்திற்கமைய விண்ணப்ப படிவங்களின்றி பிறப்பு, இறப்பு,திருமண சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையானது 07.02.2025 இலிருந்து யாழ் மாவட்டத்தில் முதலாவது பிரதேச செயலகமாக தென்மராட்சி பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
எமது பிரதேச செயலக தைப்பொங்கல் விழா 15.01.2025 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
![]() |
![]() |

















