சமுர்த்தி சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திய புத்தாண்டுக் கண்காட்சியும் விற்பனைச்சந்தையும் தென்மராட்சி பிரதேச நகரசபை மண்டபத்தில் 09.04.2025 புதன் மற்றும் 10.04.2025 வியாழன் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வு 09.04 2025 காலை 9.30 மணியளவில் தலைமையக முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி நகராட்சி மன்ற செயலாளர் அவர்களும் இனிய விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர், மற்றும் சாவகச்சேரி இலங்கை வங்கி முகாமையாளர், சாவகச்சேரி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர், சாவகச்சேரி மக்கள் வங்கி முகாமையாளர், SMIB முகாமையாளர், சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் , சமுர்த்தி பயனாளிகள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

 489957061 1856635798524043 7672437244725387358 n  489851679 1856635801857376 9218743929874758530 n
 489957061 1856635798524043 7672437244725387358 n  489958677 1856635738524049 1166349204589167004 n

யா/ மட்டுவில் சந்திர மௌலீசா பாடசாலை சாதாரண தர மாணவர்களுக்கான உயர்தர பாடத்துறைகள் மற்றும் தொழிற் கற்கை நெறிகள் தொடர்பான கலந்துரையாடல் 03.04.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.

தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கைதடி தொழில் பயிற்சி அதிகாரசபையில் 26.03.2025 அன்று இளைஞர் யுவதிகளுக்கு எதிர் காலத்தில் சிறுகைத்தொழிலினை ஆரம்பித்து செயற்படுத்துவதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு சிறுகைத்தொழில் உதவி பணிப்பாளரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் 40 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

486759352 1844890576365232 8909894639871766046 n

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான காலை உணவு வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலானது 26.03.2025 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பெண்கள் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரால் காலை உணவு வழங்குதல் தொடர்பான ஆலோசனையும் அது தொடர்பான அறிவுறுத்துதல்களும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு வழங்கப்படுகின்ற முன்பள்ளிகளிகளின் ஆசிரியர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 487316461 1844886939698929 8116179909111040427 n 486973862 1844886959698927 6925710706945588170 n 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top