|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் ஊடாக அல்லது 0212117116 என்ற தன்னியக்க தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் திகதியையும் நேரத்தையும் முற்பதிவு செய்து, அதற்காக தங்கள் கைத்தொலைபேசிக்கு DMT ஆல் அனுப்பப்பட்ட குறுந்தகவலுடன், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்த உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை என்பவற்றையும், மாகாணங்களுக்கிடையே வாகன உரிமை மாற்றம் பெற்றவர்கள் மேற்குறித்த இரு ஆவணங்களுடன் பழையவாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொரித்த ஓட்டும் தாள் என்பவற்றையும், யாழ் மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்தில் குறித்த நேரத்திற்கு சேர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சர்வோதயம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் எமது உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நாவற்குழி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் புதிய குடியேற்றம் ஐயனார் கோவிலடி, 300 வீட்டுத்திட்டம் ஆகிய பிரிவுகளில் போதைப்பொருட் பாவனை, சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகள், சிறுவர் பிரச்சினைகள், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சமூக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எமது பிரதேச செயலக அலுவலர்கள், மதுவரி திணைக்கள அலுவலர்கள்,பிரதேச சபை அலுவலர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், வலயக்கல்வி பணிமனை அலுவலர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அக் கிராமத்தில் உள்ள சமூகப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 11.11.2022 அன்று 9ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத் தெரிவு,10ம் ஆண்டு கல்வி பயிலுதல் தொடர்பான செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
|




























