https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் ஊடாக அல்லது 0212117116 என்ற தன்னியக்க தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் திகதியையும் நேரத்தையும் முற்பதிவு செய்து, அதற்காக தங்கள் கைத்தொலைபேசிக்கு DMT ஆல் அனுப்பப்பட்ட குறுந்தகவலுடன், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்த உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை என்பவற்றையும், மாகாணங்களுக்கிடையே வாகன உரிமை மாற்றம் பெற்றவர்கள் மேற்குறித்த இரு ஆவணங்களுடன் பழையவாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொரித்த ஓட்டும் தாள் என்பவற்றையும், யாழ் மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்தில் குறித்த நேரத்திற்கு சேர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 11.11.2022 அன்று 9ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத் தெரிவு,10ம் ஆண்டு கல்வி பயிலுதல் தொடர்பான செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
|
கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன், உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன், உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.
|
|
|
![]() |
![]() |
![]() |
உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் 10.11.2022 (வியாழன்) சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
|
|
|
சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் கட்டிளமைப் பருவ நடத்தைகள் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 20.10.2022 அன்று யா/ சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |























