சமுர்த்தி சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திய புத்தாண்டுக் கண்காட்சியும் விற்பனைச்சந்தையும் தென்மராட்சி பிரதேச நகரசபை மண்டபத்தில் 09.04.2025 புதன் மற்றும் 10.04.2025 வியாழன் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வு 09.04 2025 காலை 9.30 மணியளவில் தலைமையக முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி நகராட்சி மன்ற செயலாளர் அவர்களும் இனிய விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர், மற்றும் சாவகச்சேரி இலங்கை வங்கி முகாமையாளர், சாவகச்சேரி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர், சாவகச்சேரி மக்கள் வங்கி முகாமையாளர், SMIB முகாமையாளர், சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் , சமுர்த்தி பயனாளிகள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
![]() |
![]() |
![]() |
![]() |


















