"அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையை சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் "க்ளீன் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி எமது பிரதேச செயலக ரீதியாக கைதடி நாவற்குழி (J/297) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.அந்த வகையில் இவ் நிகழ்வாது கடற்கரைப்பகுதியின் 1 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடற்கரையினை துப்பரவு செய்தார்கள்.
![]() |

















