நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் 23.08.2019 தொடக்கம் 30.08.2019 வரையான காலப்பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகள் பிரதேச செயலகத்திலும், நடமாடும் சேவைகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ( பட்டதாரி பயிலுனர்) தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் விபரம்
| |
|
| |
|
இந்து கலாசாரதிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில் இயங்குகின்ற இருபத்தியாறு அறநெறிப்பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கிடையில் 2018 ஆம் ஆண்டு இந்துகலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்டதேசிய ஆக்கத்திறன் பிரதேசமட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 21.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு உதவிப் பிரதேசசெயலர் க.வினோஐிதா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூறு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இச் சான்றிதழ்களை இந்துகலாசார திணைக்களம் வழங்கியிருந்நது.



தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான கருத்தமர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2019) நடைபெற்றது. இதில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்களால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]() |
|
![]() |
போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற செயற்றிட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு வார பல்வேறு செயற்பாடுகளில் இன்று 26.06.2019 பிரதேசெயலகம் ,சுகாதாரதிணைக்களம், சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபை,மதுவரித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து சமுர்த்தித் திணைக்களத்தின் ஒழுங்மைப்பில் இன்றைய நிகழ்வாக போதைக்கெதிரான ஊர்வலமும் விழிப்புணர்வு தெருநாடகமும் சிறப்புரையும் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு காலை பத்து மணியளவில் பிரதேசசெயலகத்துக்கு முன்னால் இருந்து பிதேசசெயலரின் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமாகியது . இந்த ஊர்வரலம் சாவகச்சேரி பேரூந்து நிலையம் சென்றடைந்து அங்கிருந்து நகரசபை மைதானத்துக்கு சென்றடைந்தது பின்னர் பிரதேசசெயலரின் உரை இடம் பெற்றது. அதன் பின்னர் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது. மேற்படி ஊர்வலத்திலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தககது.
வீதி நாடகத்தினைத்தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளர் உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கெதிரான விழிப்புணர்வு தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள்பறக்க விடப்பட்டது. இறுதியாக உதவித்திட்டமிடல் பணிப்பாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
![]() |
|
![]() |
![]() |




















