பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் போசாக்கு, பாரம்பரிய உணவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கரம்பைக்குறிச்சி பொது நோக்கு மண்டபத்தில் 14.12.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக ஆயுர்வேத வைத்தியர் திருமதி. ரஜிதா கனகசுந்தரம் அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
WhatsApp Image 2022 12 15 at 11.04.20 AM  WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 
 WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 1  WhatsApp Image 2022 12 15 at 11.05.46 AM
இளைஞர் யுவதிகளுக்கான '' தொழில் சவாலை வெற்றி கொள்ளல்'' நிகழ்ச்சி 10.12.2022 (சனிக்கிழமை) JSAC நிறுவன அனுசரணை யுடன் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
வளவாளர்களாக திரு. க. கருணாகரன் (மாவட்ட இணைப்பாளர், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ) திருமதி. மோ. நிலாந்தி (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. சீ. சிவதாசன் (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
 WhatsApp Image 2022 12 12 at 12.03.03 PM  WhatsApp Image 2022 12 12 at 12.11.11 PM 1  WhatsApp Image 2022 12 12 at 12.18.13 PM
 WhatsApp Image 2022 12 12 at 12.18.34 PM  WhatsApp Image 2022 12 12 at 12.20.17 PM  WhatsApp Image 2022 12 12 at 12.10.46 PM

https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் ஊடாக அல்லது 0212117116 என்ற தன்னியக்க தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் திகதியையும் நேரத்தையும் முற்பதிவு செய்து, அதற்காக தங்கள் கைத்தொலைபேசிக்கு DMT ஆல் அனுப்பப்பட்ட குறுந்தகவலுடன், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்த உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை என்பவற்றையும், மாகாணங்களுக்கிடையே வாகன உரிமை மாற்றம் பெற்றவர்கள் மேற்குறித்த இரு ஆவணங்களுடன் பழையவாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொரித்த ஓட்டும் தாள் என்பவற்றையும், யாழ் மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்தில் குறித்த நேரத்திற்கு சேர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய  இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிடைக்கப்பெற்ற இலக்க தகடுகளின் விபரம் - 2022.11.10

சர்வோதயம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் எமது உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நாவற்குழி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் புதிய குடியேற்றம் ஐயனார் கோவிலடி, 300 வீட்டுத்திட்டம் ஆகிய பிரிவுகளில் போதைப்பொருட் பாவனை, சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகள், சிறுவர் பிரச்சினைகள், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சமூக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எமது பிரதேச செயலக அலுவலர்கள், மதுவரி திணைக்கள அலுவலர்கள்,பிரதேச சபை அலுவலர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், வலயக்கல்வி பணிமனை அலுவலர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அக் கிராமத்தில் உள்ள சமூகப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp Image 2022 12 08 at 10.39.08 AM WhatsApp Image 2022 12 08 at 10.39.08 AM 1
WhatsApp Image 2022 12 08 at 10.39.08 AM 2 WhatsApp Image 2022 12 08 at 10.39.08 AM 3

 

கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 11.11.2022 அன்று  9ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத் தெரிவு,10ம் ஆண்டு கல்வி பயிலுதல்  தொடர்பான செயலமர்வு  எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.

 WhatsApp Image 2022 11 12 at 8.18.07 PM WhatsApp Image 2022 11 12 at 8.18.07 PM 1 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top