அரச அதிபர் வெற்றி கிண்ணம் 2023 தடகளப்போட்டி தொடரில் எமது பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உத்தியோகத்தர்களில்

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 1ஆம் இடம்

கு.தேனுகா 1500m 1ஆம் இடம்

மு. சிந்துஜா 100m ஓட்டம் 2ஆம் இடம்

அஞ்சல் ஓட்டம் பெண்கள் 2ஆம் இடம்

சி .மதீஸ்வரன் குண்டு எறிதல் 3ஆம் இடம்

கல்பனா 3ஆம் இடம் குண்டு எறிதல்
கோகுலன் 3ஆம் இடம் நீளம் பாய்தல் ஆகியோர் வெற்றிகளை பெற்றுகொண்டனர் .
இவ் வெற்றிக்கு நிலவிய கடும் வெயிலை பொருட்படுத்தாது பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொண்டு, இறுதி போட்டி வரை தமது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது விளையாடி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
நுணாவில் கிழக்கு மற்றும் கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையில் கீழ் 03.10.2023 ஆம் திகதி பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பாதுகாப்பான முறையில் குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லுதல் மற்றும் இடர்பாடுகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டது. இவ்விழிப்புணர்வின் வளவாளர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
385310526 1484757019045258 2570701280663270777 n 386333881 1484757095711917 7751005682132037521 n

சிறுவர் பெண்கள் பிரிவினரால் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.09.2023 வெள்ளிக்கிழமை நாவலர் முன்பள்ளியில் ஆசிரியரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் சிறுவர் உரிமை ,பாதுகாப்பு மற்றும் உளநலம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.381206328 1478109203043373 9023429227040785156 n

கிளிநொச்சி மாவட்ட உளநல சமூகத்தின் அனுசரணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் கடந்த 26.09.2023 அன்று சாவகச்சேரி ஐங்கரன் மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாதர்சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் ,இளைஞர் கழகம் மற்றும் பெண்கள் விவகார அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான பால்நிலை உணர் திறன், பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்துதல் என்னும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

375971235 1472910253563268 5699104825961004562 n

Friends நிறுவனத்தின் அனுசணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவினரால் வரணி வடக்கு மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 12.09.2023 செவ்வாய்க்கிழமை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் பாதுகாப்பு, நெருக்கீட்டு முகாமைத்துவம், மற்றும் பால்நிலை வன்முறை, வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top