மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களமும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் முனைவோரிற்கான சந்தை நிகழ்வு 14.06.2024 வெள்ளிக்கிழ‌மை தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பிரதேசசெயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொழில் வழங்கு நிறுவனங்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 448749413 1639590730228552 6050257542947842113 n  448748824 1639590670228558 241945752734666402 n 448745516 1639590640228561 2754513678133637026 n

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 26.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப்பிரதேசசெயலாளர், கணக்காளர், மாவட்ட தலைமையக முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

449488536 1645686799618945 5136994629297248829 n

IOM சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் மட்டுவில் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொதுமக்களிற்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு 13.06.2024 ஆம் திகதி கண்ணகை சனசமூக நிலையத்தில் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டது.இவ்விழிப்புணர்வின் வளவாளர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், IOM அமைப்பின் உத்தியோகத்தர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.மேலும் இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டோர், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 448386495 1636575270530098 6298570606199240075 n  448429989 1636575277196764 4200901774117430666 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top