சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நுணாவில் மத்தி கபிரிவில் 17.07.2025 காலை 10.00 மணிக்கு அ.பார்த்தீபன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

518360088 1937601530427469 5043046846823435050 n

தென்மராட்சி பிரதேச மட்ட விளையாட்டு விழா 2025.08.11 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக வடமாகான விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலகத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு க.விஜிதரன் அவர்களும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு பொ.நடேசலிங்கம் அவர்களும்கௌரவ விருந்தினராக மாகாண நீளம் பாய்தல் சாதனையாளர் திரு நா. நிதுயன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 518342121 1932934090894213 6673483967795163267 n  518357197 1932935087560780 6257895824359650506 n 1 min
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.07.2025) காலை 09.00 மணிக்கு கொடிகாமம் கச்சாய் கிராமத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றைய தினம் சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் இந் நடவடிக்கையானது 16.07.2025 திகதிவரை நடைமுறைப்படுத்தப்படும்.
518312040 1932916827562606 4767240488353715235 n 518306110 1932916950895927 5306027979843327080 n

விதாதா பிரிவினரால் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சலவைத்திரவம் செய்வது தொடர்பான பயிற்சிப்பட்டறை 26- 06- 2025அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top