
சிறுவர் பெண்கள் பிரிவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கிளிநொச்சி உளநல அமைப்பின் அனுசரணையில் பால்நிலை சமத்துவம், பெற்றோரியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது நுணாவில் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் தலைமையில் 09/04/2024 அன்று 9.30 -2.30மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராமிய அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்னும் தொனிப்பொருளில் 2024ம் ஆண்டிற்கான மகளிர் தின விழாவானது தென்மராட்சி பிரதேச செயலத்தில் 26.03.2024 அன்று மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருமதி Dr.கமலா ஜெகூ (பொது வைத்திய நிபுணர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி சுகிர்தன் குகப்பிரியா (சட்டத்தரணி சட்ட அலுவலர்), திருமதி லலிதாமலர் முகுந்தன் (அதிபர் யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), திரு யூட் நிஷாந்தன் (முகாமையாளர் உலக தரிசன நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.கௌரவ விருந்தினராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி (உலக பசி ஒழிப்பு மன்றம் கனடா) அவர்களும் கலந்துகொண்டார்.இதில் சிறப்புரைகள் ,சாதனைப் பெண்கள் கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது

சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பின் வருடாந்த பொது கூட்டம் 28.03.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்பின் தலைவரின் தலைமையின் நடைபெற்றது . இவ் நிகழ்வின் போது 2024 ஆம் ஆண்டிற்கான புது நிர்வாக தெரிவு இடம்பெற்றது .இவ் நிகழ்விற்கு சமுர்த்தி முகாமையாளர் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
















