"சுரகிமு கங்கா " தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் /பிரதேச சுற்றாடல் குழுக்கூட்டம் என்பவற்றுக்குரிய கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.09.2022 அன்று நடைபெற்றது.

WhatsApp Image 2022 09 21 at 11.58.45 AM  WhatsApp Image 2022 09 21 at 11.58.45 AM 1 

சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் கட்டிளமைப்பருவ நடத்தைகள் தொடர்பான பெற்றோர் மற்றும் மாணவர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு 07.09.2022 அன்று யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

305078455 1237327360454893 5344637289487079550 n  
305923244 1237327383788224 2891058753581297921 n  

 

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காணுதல் - 2022

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கத்தை கொண்ட நலன்புரி நன்மைகள் சடடத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, சகல நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவின் பொருட்டு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நீங்கள் ஏற்கனவே பயனடைந்து கொண்டிருந்தால் அல்லது அரசு செயல்படுத்தும் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு, சிறுநீரக நோய் மற்றும் பொதுசன மாதாந்த உதவிகொடுப்பனவு (PAMA) போன்ற ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவராயின், கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்/ சமூக சேவை உத்தியோகத்தர்/ முதியோர் உரிமைகள் மேம்பாட்டு ஊக்குவிப்பு அலுவலரால் சான்றுதிப்படுத்தி 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலர் அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

விண்ணப்பபடிவத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்.

மாணவர்களது கற்றல் செயற்பாடு, கண்காணிப்பு, எதிர்கால தொழில் போக்கு, தொழில் சார் பயிற்சி தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று 2022.09.13 கொடிகாமம் வடக்கு பிரிவில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.மோ. நிலாந்தி,திரு. சீ. சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சிவரஞ்சன் அவர்களினால் நடாத்தப்பட்டது.

301859925 1236618220525807 3653512900602726612 n 302489571 1236618120525817 1737689480813395413 n

 

J/301 கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 06.09.2022 அன்று கிராம மட்ட மகளிர்,சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி  உத்தியோகத்தர்களினால்  நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2022 09 07 at 9.20.35 AM   WhatsApp Image 2022 09 07 at 9.20.36 AM
 WhatsApp Image 2022 09 07 at 9.20.58 AM  WhatsApp Image 2022 09 07 at 9.21.11 AM

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top