தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரணி சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து வரணி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட 126 மாணவர்களுக்கான 233,939.72 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணம் மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான சிசுதிரிய புலமைபரிசில் வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 14.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், CBO தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
![]() |


















