18.01.2023 அன்று நாவற்குழி சித்தி விநாயகர் முன்பள்ளியில் முன்பள்ளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு போதை ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளராக திரு. தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ) , திருமதி.ஜெனித்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) திருமதி. தர்சினி (சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்) மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் தாபகர் வண பிதா வின்சன் பற்றிக் , வைத்தியர் நிர்மல் சிவில் செயற்றப்பாட்டாளர் தர்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் முன்பள்ளி சிறுவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வோதய நிறுவன நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















