தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மாவட்ட பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் 26.06.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப்பிரதேசசெயலாளர், கணக்காளர், மாவட்ட தலைமையக முகாமையாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், கருத்திட்டமுகாமையாளர், வங்கிமுகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















