கொரோனா வைரஸ் தொற்று – COVID-19  விழிப்புணர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல்   

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 ) காரணமாக  தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு சேவையைப் பெற வருவோரும், சேவையை வழங்க வருவோரும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு  பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
 1.     இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டைவலி மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள்அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்கவும்.
       
 2.     அத்தியாவசியத் தேவை இருப்பின் மட்டும் அலுவலகத்திற்கு வருகை தரவும்.
       
 3.     பொது மக்களாகிய நீங்கள் ஒரு அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்குஒருவர் மட்டும் வருகை தரவும்.
       
 4.      முகக்கவசம் (Mask) அணிந்து வருகை தரவும்.
       
 5.     அலுவலக வாயிலிலுள்ள நீர்க்குழாயில் உங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டுகழுவிய பின் உள் நுழையவும்.
       
 6.     கூட்டமாகக் கூடியிருப்பதைத் தவிர்த்து இருவருக்கிடையில் குறைந்தது 1m தூரஇடைவெளியைப் பேணிக் கொள்ளவும்.
       
 7.     இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாயினையும் மூக்கினையும்கைக்குட்டையினால் / ரிசுக்கடதாசி ஒன்றினால் /முழங்கையினால் மூடிக்கொள்ளவும்.

More details click here

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top