விசேட பிரதேச மட்ட காணிபயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 18.11.2025 செவ்வாய்க் கிழமை பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், பிரதேச சபை தவிசாளர் நகரசபை செயலாளர், வனபரிபாலனத் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலர்கள், கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதில் வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மற்றும் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளடங்குவதனால் அக்காணிகள் விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

586447149 2047536022767352 1691648732181065157 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top