யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் அங்குரார்ப்பண நிகழ்வானது 2025.09.30 செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மட்டுவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன் அவர்கள், வைத்திய கலாநிதி ச. சிறிபவானந்தராஜா அவர்கள், க.இளங்குமரன் அவர்கள், மாவட்ட செயலாளர் உயர்திரு.ம.பிரதீபன் அவர்கள் , வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சாந்த ஜயரட்ண, யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் உள்ளூர் அதிகார சபை கௌரவ உறுப்பினர்கள் , யாழ்மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்,பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்ஆகியோர் பங்குபற்றினர்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.
 558141745 2000729494114672 4788065314264338784 n 556151777 2000738127447142 3275119963410474232 n 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top