சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது 12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சி .சிறிதரன் மற்றும் கௌரவ செ .கஜேந்திரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், மற்றும் நகரசபை உப தவிசாளர் ,உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் , திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

138292389 2337711833041110 3744122547509153789 n 138680596 2337712126374414 4540507258396044513 n

 

News & Events

01
Oct2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top