Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

கடந்த 13.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ க.இளங்குமரன் (பா.உ) அவர்கள் தலைமையில் சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் கௌரவ ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி (பா.உ) அவர்கள், சாவகச்சேரி நகரசபை கௌரவ தவிசாளர் மற்றும் அழைக்கப்பட்ட உறுப்பினர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் அழைக்கப்பட்ட உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர் / பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அழைக்கப்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியசோதி அவர்கள் தென்மராட்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றதோடு தென்மராட்சிப் பிரதேசத்திற்கான நான்காம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாக இக்கூட்டம் அமைவதோடு கடந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்களது முன்னேற்றங்களை ஆராய்வதாகவும் அடுத்த ஆண்டில் எவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றிய முன் வைப்புக்களை மேற்கொள்வதற்காகவும் இக் கூட்டம் அமைந்துள்ளதென தெரிவித்தார். மேலும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் மூலம் சரியான முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டு நடாத்துவதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கௌரவ. க.இளங்குமரன் (பா.உ) அவர்களை கூட்டத்தினை தலைமையேற்று நடாத்துமாறு கோரி நின்றார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனது தலைமையுரையில் தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெறும் நவராத்திரி பூஜை நிகழ்வுகள் காரணமாக தென்மராட்சிக் கலாச்சார மண்டபத்தில் மக்களிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்தமைக்கு நன்றியை தெரிவித்ததோடு உரிய நேரத்திற்கு இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை ஆரம்பிப்பதற்கேதுவாக வருகை தந்த அனைவரிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் தென்மராட்சிப் பிரதேசத்தின் தேவைப்பாடுகளை படிப்படியாக பூர்த்திசெய்வதுடன் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து மக்களிற்கு தெரியப்படுத்தும் ஒரு கூட்டமாக இக் கூட்டம் அமைகின்றதெனக் கூறினார். இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வேலைத்திட்டங்கள் பற்றி அனைவரும் அறியமுடியும் என்பதுடன் அவை தொடர்பில் வெளிப்படைத் தன்மையும் ஏற்படுமென தெரிவித்தார். மேலும் மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்கள் யாவும் தம்மால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களது விபரங்களை பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தல் வேண்டும் எனவும்; அவை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பதிவு செய்யப்படாத வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் வீதிகளை பதிவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதுடன் அந்நடவடிக்கை எதிர்வரும் ஆண்டுகளில் குறித்த வாய்க்கால்கள், குளங்கள் வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவசியமானதாகுமெனத் தெரிவித்ததுடன் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின்படி கூட்டத்தினை நடாத்திச்செல்வோமெனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பிரதேசம் சார்பான புள்ளி விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குழுவின் அனுமதி பெறப்பட்டது. சிறிய நீச்சல் தடாகத்துடன் கூடிய விளையாட்டரங்கினை சாவகச்சேரி நகரசபை மைதானத்திலும் ஸ்கேற்போல் மைதானத்தை கோயிற்குடியிருப்பு லிகேரியர் தேவாலயத்திற்கு அருகில் கடற்கரையை அண்மித்ததாக அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி பெறப்படாது கொடிகாமம் கிராமிய ஆயள்வேத வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைமையை உடனடியாக நிறுத்தி இலவசமாகவே சிகிச்சை முறைமையை முன்னெடுப்பதற்கும், நாவற்குழி பாலத்திற்கருகிலுள்ள காணியில் உரிய அனுமதி பெறப்படாது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும், விண்ணப்பங்கள் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டும் கால்நடைகளிற்கு காதில் பட்டி பொருத்தப்படாமை தொடர்பாகவும், கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் மணல் அகழ்தல் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் எத்திணைக்களத்தினாலும் பதிவிற்கு இதுவரை உள்வாங்கப்படாத குளங்கள், வாய்க்கால்கள், வீதிகள் தொடர்பாகவும் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றும் உரிமை தொடர்பான விவகாரத்தால் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள தடைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் அதனால் எதிர்கால தலைமுறையினருக்கு கிடைக்கவுள்ள அனுகூலங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெறும் கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துப்பரிமாறல்கள் இடம்பெற்று பி.ப 2.00 மணிக்கு கூட்டமானது நிறைவுபெற்றது.
 19.01 19 

News & Events

19
Oct2026

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கடந்த 13.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

14
Oct2026

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

 மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான...

13
Oct2026

போசாக்கு உலர் உணவுப்பொதி வழங்குதல்

போசாக்கு உலர் உணவுப்பொதி வழங்குதல்

வடக்கு மாகாணத்திலுள்ள நலிவுற்ற குடும்பத்திலுள்ள போசாக்கு குறைபாடுள்ள விசேட...

01
Oct2026

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

Scroll To Top