தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தை மீண்டும் தன்வசமாக்கியது.

 830199785 2325703574950594 5607283549520794109 n
சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகங்களுக்கு விருது!
சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (26.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை தென்மராட்சி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள் மற்றும் சனாதிபதி நிதியத்தின் பிரதேச விடய உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.825271231 2323662761821342 483946580032213988 n
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினத்தை சிறப்பிக்கும் வகையில், தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட J/299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் "அத்தம" நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், நெகிழி மற்றும் கழிவுகளை அகற்றி கடல்சார் உயிரினங்களைப் பாதுகாத்தல், தூய்மையான மற்றும் நிலைபேறான கிராமிய சூழலை உருவாக்குதல்,
​ "சுத்தமான இலங்கை" -Clean SriLanka எனும் தேசிய இலக்கை நோக்கி பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுதல் ஆகிய இலக்குகளை அடையும் வகையிலான விழிப்புணர்வு செயற்றிட்டமாக, கடற்கரை தூய்மைப்படுத்தும் சிறப்பு செயற்றிட்டம் கடந்த சனிக்கிழமை (19.09.2026) காலை 8:30 மணிக்கு நடைபெற்றது.
​தென்மராட்சி பிரதேச செயலாளர் உயர்திரு எப்.சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார், பிரஜாசக்தி குழுவினர், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தினர். ​இதேவேளை, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 60 கிராம அலுவலர் பிரிவுகளிலும் "அத்தம" (Aththama) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றாடல் மேம்பாட்டு விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன.
 aththama1 aththama 

யாழ்ப்பாண மாவட்ட மட்ட முதியோர் மற்றும் மாற்றுவலுவுள்ளோர் தின விழா நேற்றைய தினம் 24.09.2026 யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிலிருந்து 20 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பங்கு பற்றியிருந்தனர். நடைபெற்ற போட்டிகளில் முதியோருக்கான பாட்டுப்போட்டி பெண்கள் பிரிவில் முதலாம் இடம் நகுலேஸ்வரன் புஷ்பராணி அவர்களும் ,முதியவருக்கான சங்கீதக்கதிரைப் போட்டி ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடம் பண்டாரி வல்லி அவர்களும் பெண்கள் பிரிவில் மூன்றாம் இடம் வல்லி பாக்கியம் அவர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கீதக் கதிரை பெண்கள் பிரிவில் முதலாம் இடம் விநோத் தேவி அவர்களும் , உருவம் தெரிதல் போட்டியில் சிவபூமி பாடசாலை மாணவி ஜெயக்குமார் கஸ்தூரி இரண்டாம் இடமும், பாட்டுப்போட்டியில் குலேந்திரன் ஜெகதீசன் இரண்டாம் இடமும் கிடைக்கப்பெற்று பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

 25.09.2026 25.09 
விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி பிரதேச செயலாளர் திரு F .C சத்தியசோதி அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (15.09.2026) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது .
இன் நிகழ்வில் மாவட்ட புள்ளிவிபர திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு M.வித்தியானந்தநேசன் , உதவிப் பிரதேச செயலாளர், திரு S .அருள்நாதன், (புள்ளிவிபர உத்தியோகத்தர், பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் ), திருமதி E .பகீரதி (புள்ளிவிபர உத்தியோகத்தர் ,பிரதேச செயலகம் நல்லூர்), பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர் .
 
 FB01 810384034 2311306243056994 5528932303393781836 n 

News & Events

30
Sep2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top