| கச்சாய் துறைமுகம் ஊடாக தமிழகத்திற்கும் வட இலங்கைக்கும் இடையிலான படையெடுப்புக்கள்,அரசியல் தொடர்புகள், வணிக பண்பாடு, சமய தொடர்புகள் முதலானவை இடம்பெற்றுள்ளது. இன்றும் துறைமுக கடற்பரப்பில் மரக்கலங்கள் நங்கூரமிட்டு கட்டுவதற்கான கற்தூண்கள் கடலினுள் காணப்படுகின்றன. |
|
| இடத்தின்பண்புகள் |
| இப்பகுதியின் மையத்தில் வெளிச்சவீடு, வாடிவீடு, பழமையான செங்கல் கட்டிடங்கள், சதுரவடிவில் அமைந்த கிணறு என்பன காணப்பட்டன. |
|
| தற்போது பழமையான கிணறு தவிர்ந்த அனைத்து கட்டிடங்களும் வெளிச்சவீடும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டன. |
|
| சான்று |
| கச்சாய் துறைமுகப்பகுதியினைச் சூழ ஆரம்பகாலங்களில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆவுரஞ்சிக்கல், எறியால்பிட்டிசுடலை, பிரதான நீர்ப்பாசனக்கால்வாய், நெல்வயல்கள், கேணிகள், வழிபாட்டுத்தலங்கள் என்பனதுறை முகப்பகுதியினைச் சூழ்ந்து அமைந்துள்ளன.கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரிய மட்பாண்ட மற்றும் தொல்லியல் எச்சங்கள் என்பவற்றை சேகரித்ததன் ஊடாக இங்கு துறைமுகக் குடியிருப்பு ஒன்று காணப்பட்டிருந்தமையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. |
|
| அமைவிடம் |
| கச்சாய்துறைமுகம் பாலாவி பிரதேசத்திற்கும் புங்கடி பிரதேசத்திற்கும் இடையே J/324 கிராம பிரிவில் அமைந்துள்ளது. |
|
| செல்லும்முறை |
| சாவகச்சேரி நகரத்தில் இருந்து கச்சாய் வீதி ஊடாக இத்துறைமுகத்திற்கு செல்ல முடியும். |
|
| ஒழுங்குமுறை |
| தனியார் வாகனங்களில் செல்ல முடியும். |
|
| வரிவிதிப்புக்கள் |
| இல்லை |
|
| சிறப்புக்கட்டுப்பாடுகள் |
| இல்லை |
|
| தூரம் |
| சாவகச்சேரி பஸ் தரிப்பிடத்தில் இருந்து 8.5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. |
|
| பராமரிப்பு |
| இல்லை |