கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) காலை 9.00 மணிக்கு பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 இலவச காணி உறுதிப்பத்திரங்களும் , யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 இலவச காணி உறுதிப் பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன், காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க, யாழ் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.விமலன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
533861764 1959624784891810 2220216485254548459 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top