பிரதேச செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழாவும் கும்பம் சரித்தல் நிகழ்வும் நேற்றைய தினம் 02.10.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை 9 மணியளவில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான தோரணம் பின்னுதல் மற்றும் மாலை கட்டுதல் போட்டி நடைபெற்றதை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களினால் வித்தியாரம்பம் நடைபெற்று கும்பம் சரித்தல் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து கலைநிகழ்வுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டு நிறைவுற்றது.
















