எமது பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக(தாபன கிளை) கடமையாற்றி இன்றுடன் ஒய்வு பெற்று செல்லும் திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டும் இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள். இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கின்றோம் .
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|




















